தேசிய பத்திரிகையாளர் தினம்! முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

சற்றுமுன்
stalin edappadi
stalin edappadi

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி பத்திரிகையாளர்களுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

national-journalism-day
national-journalism-day

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்…

பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் அனைத்து நண்பர்களுக்கும், உளப்பூர்வமான வாழ்த்து. உண்மை நிகழ்வுகளை மக்களுக்கு நடுநிலையோடு எடுத்துரைப்பது ஊடகங்கள் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில், அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக விளங்கும், பத்திரிகை துறையின் மகத்தான பணியை பாராட்டுகிறேன் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

edappadi-wishes
edappadi-wishes

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இருள் நீக்கி ஒளி தருதல் மட்டுமல்ல, அந்த ஒளியை பேதம் இல்லாமல் வழங்கும் துறை தான் பத்திரிக்கை துறை. உங்கள் வாழ்வில் உலக வாழ்வு அடங்கி இருக்கிறது. உங்களது வெற்றியில் உலக வெற்றி உள்ளடங்கி இருக்கிறது. எனவே, உங்களது வாழ்க்கையே பொதுவாழ்க்கைதான். அத்தகைய பொதுவாழ்க்கைக்கு வந்த பத்திரிகையாளர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்தான்’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.