கார்த்திகை மாதம் மண்டல பூஜை காலம் தொடங்கியதை அடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை செய்வித்தார்.
நாளை கார்த்திகை 1 ஆம் தேதி முதல் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 26-ந் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ந் தேதியும் நடைபெறும்.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொரோனா இல்லை என்னும் மருத்துவ சான்றிதழோடு வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
பம்பை, மணிமலை உள்ளிட்ட ஆறுகளில் குளிக்கவும், சபரிமலை தவிர இதர கோயில்களில் வழிபடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
தினசரி 1000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களும், மண்டல மகர விளக்கு நாட்களில் 5 ஆயிரம் பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்… என்று தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.