மு.க.அழகிரி பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திமுக., தலைவராக இருந்த மு.கருணாநிதியின் மகனும், தற்போதைய திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அண்மைக்காலமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இவர் தனிகட்சி தொடங்குவார் என்று கூறப்படும் நிலையில், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து இதுவரை தாம் எந்தமுடிவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார் மு.க.அழகிரி.
இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், மு.க.அழகிரி பாஜக.,வுக்கு வந்தால் வரவேற்போம் என்று கூறினார். மேலும், மு.க.அழகிரியுடன் இதுவரை பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை எனவும் விளக்கம் அளித்தார்.