பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்து 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் பிரபு, ஜோதிகா, வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு சந்திரமுகி 2 உருவாவதாக செய்திகள் வெளியானது. பி.வாசு இயக்க நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பதாக கூறப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக இப்பட வேலைகள் அப்படியே நின்று போனது.
தற்போது சந்திரமுகி 2 பட வேலைகள் மீண்டும் துவங்கியுள்ளது. இந்த முறை இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சந்திரமுகி என்கிற தலைப்பை ரூ.1. கோடி கொடுத்து சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து சன் பிக்சர்ஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் ஒரு தலைப்புக்கு இவ்வளவு அதிக தொகை கொடுக்கப்பட்டது முதல் முறை என சினிமா வட்டாரம் வாயை பிளந்துள்ளது.
சந்திரமுகி 2 படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.