பாலிவுட்டில் 2018ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற திரைப்படம் அந்தாதூண். வித்தியாசமான கதை, திரைக்கதை, காட்சியமைப்பு மற்றும் நடிகர்கள் சிறந்த நடிப்பே இப்படத்தின் வெற்றிக்கு காரணம் ஆகும்.
இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியுள்ளார். எனவே, அவரது மகன் பிரசாந்த் நடிக்க இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தை மோகன் ராஜா இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், சில காரணங்களால் அவர் விலகி விட ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார்.
இப்படத்திற்கு இசையமைக்குமாறு ஏ.ஆர்.ரகுமானை அனுகியுள்ளார் தியாகராஜன். ஆனால், ரீமேக் படங்களுக்கு தான் இசையமைப்பதில்லை என மறுத்துவிட்டராராம். எனவே, வேறு இசையமைப்பாளரை தேடி வருகிறார் தியாகராஜன்.
