Homeசற்றுமுன்தமிழகத்தில் 76 குடிநீர் திட்டப் பணிகள்: தமிழக முதல்வர் எடப்பாடி பெருமிதம்!

தமிழகத்தில் 76 குடிநீர் திட்டப் பணிகள்: தமிழக முதல்வர் எடப்பாடி பெருமிதம்!

edappadi-in-madurai-fun1
edappadi-in-madurai-fun1

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி ரூ.1295.76 கோடி மதிப்பில் முல்லை பெரியாறு அணை லோயர் கேம்பிலிருந்து மதுரைக்கு 125 எம்.எல்.டி குடிநீர் எடுக்கப்பட்டு குழாய்கள் வழியே குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்!

அதனை தொடர்ந்து 30 கோடி மதிப்பில் புதிய மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் உள்ளிட்ட முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

edappadi-palanisami-in-sivagangai
edappadi-palanisami-in-sivagangai

தமிழகத்தில், மத்திய, மாநில அரசின் நிதியான ரூ. 3650 கோடி மதிப்பீட்டில் 76 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்… தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி!

மதுரையில் 1295.76 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டி அவர் பேசியது:

மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமணை பணிகள் தொடங்கப்படும். மதுரை விமான நிலையத்தில் விரிவாக்கப் பணியின் போது, கீழ்பாலம் அமைக்கப்படும். மதுரையை பொறுத்த வரை பல்வேறு உயர் மட்டப்பாலம், பறக்கும் பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் வரக்கூடாது என்பதற்காக பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப திட்டங்கள் நிறைவேற்றப் படுகிறது.

அரசு பள்ளிகளின் மாணவர்களுக்காக 7.5. மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனை பேணி காக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் உதவிகள் வழங்கப்படுவதாகவும், 2023…ல் மதுரை நகரில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் என்றார் எடப்பாடி பழனிசாமி.

edappadi-in-madurai-fun
edappadi-in-madurai-fun

அதிமுக அரசு அறிவித்த திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறோம். தமிழகம் முழுதும் 76 கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தி வருகிறது. கூட்டு குடிநீர் திட்டத்தால் 7,600 எம்.எல்.டி குடிநீர் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புதிய திட்டங்களால் குடிநீர் பிரச்சினைகள் வராது.

மதுரையில் 974 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெறுகிறது. மதுரை சர்வதேச விமான நிலையம் விரிவாக்க பணிகளுக்காக தற்போதைய நான்கு வழிச்சாலை விமான நிலைய ஒடு தளத்திற்கு கீழே கீழ்பால சாலையாக அமைக்க ஆய்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

எதிர்கட்சிகளின் பார்வையில் கோளாறு ஏற்பட்டுள்ளது, இதனால் அவர்களுக்கு தமிழக அரசை பாராட்ட எதிர்கட்சிகளுக்கு மனமில்லை, தமிழக அரசு மக்களுக்காக இரவு, பகலாக பணியாற்றி வருகிறோம், துணை முதல்வர் திட்டங்களை செயல்படுத்த நிதி ஆதாரங்களை பெருக்கி தருகிறார், ஒவ்வொரு அரசுத்துறையும் முத்திரை பதித்து வருகிறது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் விரைவில் துவக்கப்படும்.

குடிமரமத்து திட்டத்தால் மழை நீர் ஒன்று கூட வீணாகமல் சேமிக்கப்பட்டு வருகிறது. திட்டங்களை பார்க்காமல் தேர்தலுக்காக ஸ்டாலின் தினமும் அரசை வசைபாடி வருகிறார். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் 313 அரசுப் பள்ளி மாணவர்கள் பயன் அடைந்து உள்ளனர் என்று பேசினார்

இதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் ஜெயலலிதாவில் கனவு. முதல்வர் மீது ஒரு குறையும் சொல்ல முடியாத அளவிற்கு ஆட்சி செய்கிறார். பூட்டிய அறைக்குள் இருந்து பேசுகிறார் ஸ்டாலின்.

ஜெயலலிதா முல்லை பெரியாறு அணையை சட்ட ரீதியாக மீட்டார். திமுக ஆட்சியில் முல்லை பெரியாறு அணை பிரச்சினையை கருணாநிதி முறையாக கையாலவில்லை, ஜெயலலிதா 7 ஆண்டுகள் போராடி காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழிலில் வெளியிட்டார்.

மீத்தேன் திட்டத்திற்கு கையெப்பம் மிட்டவர் ஸ்டாலின்.ஸ்டாலின் போலி நாடகம் மக்கள் மத்தியில் பலிக்காது. ஸ்டாலின் கனவு பலிக்காது. 2021 ல் அதிமுக அரசு தான் வெற்றி பெறும் என்று பேசினார்.

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார் வரவேற்றார்.
அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, திண்டுக்கல் சீ. சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாணிக்கம், நீதிபதி, சரவணன், பெரியபுள்ளான், வே. ராசன் செல்லப்பா, மாநகராட்சி ஆணையர் விசாகன், மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன், பிஆர்ஓ.க்கள் நவீன்பாண்டியன், சித்திரவேலு, சாலிதளபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,118FansLike
376FollowersFollow
68FollowersFollow
74FollowersFollow
3,228FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...