ஏப்ரல் 20, 2021, 4:30 காலை செவ்வாய்க்கிழமை
More

  தாடி வைத்தவன் எல்லாம் பாரதி ஆகமுடியாது! பாரதியைப் புகழ்ந்த மோடியை விமர்சித்த கார்த்தி சிதம்பரம்!

  பிரதமர் மோடியை விமர்சித்து சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்

  karthi-chidambaram
  karthi-chidambaram

  தாடி வைத்தவன் எல்லாம் பாரதி ஆகிவிட முடியாது பாரதியாரை புகழ்ந்த பிரதமர் மோடியை விமர்சித்து சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

  மதுரை விமான நிலையத்திற்கு சென்னை செல்வதற்காக வருகை தந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளரை சந்தித்து பேசும்போது

  ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் திமுகவிற்கு பாதிப்பு ஏற்படும் என எச்.ராஜா பேசியது குறித்த கேள்விக்கு

  ரஜினிகாந்த் என்னுடைய நண்பர் அரசியல்வாதியாக அவர் என்ன முடிவெடுக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. அரசியல் கட்சி ஆரம்பிப்பது என்பது பற்றி சொல்லியிருக்கிறார் கட்சி ஆரம்பித்தால் அந்த கட்சியின் வடிவம், உறுப்பினர்கள், நிர்வாகிகள் என்பது பற்றி நிலைப்பாடு இல்லாத கட்சியை பற்றி விமர்சனம் செய்ய முடியாது.

  நீட் தேர்வு பற்றிய அந்த கட்சி நிலைப்பாடு, விவசாயிகள் போராட்டம் விவசாய மசோதாவிற்கு ஆதரிக்கிறார்களா.? தமிழக மக்களின் பிரச்னைகளுக்கு ஆதரவு தெரிவிக்காத கட்சியின் நிலைப்பாட்டை அக்கட்சியை பற்றி கூற முடியாது பிறக்கின்ற குழந்தை நின்று அது என்ன பேசுது என்று தெரிந்த பின்பு தான் பேச முடியும்.

  என்னை பொருத்தவரை நிலைப்பாட்டுடன் திமுக, காங்கிரஸ் கூட்டணிதான் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும். இந்த போட்டி என்பது திமுக, அதிமுகவிற்கு மட்டும்தான் மற்றவர்கள் எல்லாம் ஒரு ஸ்பாய்லர் ஆக தான் இருக்கலாமே தவிர வெற்றிபெற வாய்ப்பில்லை.

  திமுக, காங்கிரட்ஸ், மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொள்கை இல்லாத கட்சி என்று அமைச்சர் செல்லூர் ராஜு பேசியது குறித்த கேள்விக்கு

  அந்தந்த கட்சி என்ன கொள்கை என்று அந்தக் கட்சியின் செயலாளர்கள் சொல்வார்கள். எங்களுடைய கட்சியின் கொள்கை பற்றி தெளிவாக விளக்க நான் தயாராக உள்ளேன். அமைச்சர் செல்லூர் ராஜு சொல்லும் இடத்திற்கு வர தயாராக இருக்கிறேன். தொலைக்காட்சியில் காண்பித்தால் விவாதம் நடக்கும்.

  2-ஜி ஊழல் குறித்து ஆ.ராசா மீது அதிமுகவினர் தொடர்ந்து பேசிவருவது குறித்த கேள்விக்கு

  2-ஜி என்பது பொய்யான பூதம், பூதத்தை கிளப்பினார்கள் அந்த பூதம் புதைக்கப்பட்டது மீண்டும் அந்த பூதத்தை கிளப்புகிறார்கள் அந்த பூதம் இல்லை அது ஒரு மாயை 2-ஜி வழக்கை ஒரு பொய் வழக்கு அந்த பொய்வழக்கில் ராஜா, கனிமொழி ஆகியோர் வெற்றி பெற்றுவிட்டார்கள் அது புதைக்கப்பட்டு முடிக்கப்பட்ட விஷயம். அதிமுகவினர் ஆ ராசா விடம் விவாதம் மேற்கொண்டால் மண்ணைகவ்வுவார்கள்.

  _ பாரத் பந்த் முற்றிலும் தோல்வி என பாஜக தலைவர் எல்.முருகன் குறித்த கேள்விக்கு_

  அவருக்கு வெற்றி என்றால் வேலி யாத்திரை என்று அவர் கண்ணுக்குத் தெரியும், பாரத் பந்த் அவருக்கு தோல்வி என தெரிகிறது.

  வாரணாசிக்கு – பாரதிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என மோடி பேசியது குறித்த கேள்விக்கு

  மோடி பேசியது என்ன என்று எனக்கு தெரியவில்லை. தாடி வைத்தவன் எல்லாம் பாரதி ஆகிவிட முடியாது

  தேர்தலில் காங்கிரசுக்கு குறைந்த இடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக.? செய்திகள் கூறியது குறித்த கேள்விக்கு

  கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் அங்கம் வகிக்கின்றன என்பது கூட்டணி ஆலோசனைகளுக்கு பின்னர் தீர்மானிக்கப்படும். சார்வே எடுத்திருக்கிறோம் எந்தஎந்த சீட்டுகளில் நாங்கள் நின்றாலும் அதில் வெற்றி பெறுவோம் எனக்கு உறுதியாக இருக்கிறோம். தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருக்கும் திமுக தலைமையில் ஆட்சி மாற்றம் அமையும் என்று குறிப்பிட்டார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,115FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »