
இனி இவர்கள் கூட ஸ்ரீவாரி தரிசனம் செய்து கொள்ளலாம்…!
ஸ்ரீவாரி பக்தர்களுக்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் ஒரு சுபச் செய்தி கூறியுள்ளார்கள்.
இதற்கு முன் ஸ்வாமி தரிசனம் விஷயத்தில் இருந்த கட்டுப்பாடுகளை நீக்கியதே அந்த சுபச்செய்தி.
கொரோனா தொற்றின் தாக்கம் கலியுக ப்ரத்யக்ஷ
தெய்வம் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியையும் விட்டுவைக்கவில்லை. மாதக்கணக்காக ஸ்ரீவாரி தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்காத விஷயம் தெரிந்ததே.
கட்டுப்பாடுகளின் தளர்வுக்கு பின் பல நிபந்தனைகளுக்கு இடையில் குறைந்த எண்ணிக்கையில் ஸ்ரீவாரி தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதித்து பாலகமண்டலி தீர்மானம் வெளியிட்டது. இது தொடர்பாக 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

அந்தச் சூழ்நிலையில் ஸ்ரீவாரி பக்தர்கள் ஏடுகொண்டலவாடு தரிசனம் எப்போது செய்து கொள்ளலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு டிடிடி நல்ல முடிவு எடுத்துள்ளது. அது என்னவென்றால்… 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களும் தரிசனத்துக்கு அனுமதி அளித்து டிடிடி முக்கிய தீர்மானம் எடுத்துள்ளது. ஆனால் சுய நிபந்தனைகளைக் கைக்கொண்டு தரிசனம் செய்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.
பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று அதிகாரிகள் பல கட்டுப்பாடுகளை ரத்து செய்து உள்ளார்கள். ஆனால் முதியோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பிரத்தியேக தரிசன க்யூ வசதி இல்லை என்று அதிகாரிகள் கூறி விட்டார்கள். முன்பு பிரத்தியேக ஏற்பாடுகள் இருந்த விஷயம் தெரிந்ததே.
கொரோனாவின் தாக்குதல் குறைந்துள்ளதாலும் விரைவில் கோவிட் வாக்சின் வரப்போவதாலும் டிடிடி அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. கட்டுப்பாடுகளின் தளர்வுகளால் திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.