
அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் ஐதராபாத் சென்றார்
வரும் 29ஆம் தேதிக்குள் படப்பிடிப்பு முடிந்து சென்னைக்கு திரும்புவேன் என்று சென்னை விமான நிலையத்தில் ரஜினி காந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக, வரும் 30ஆம் தேதிக்குள் அரசியல் கட்சி குறித்தும், அடுத்தக் கட்ட அறிவிப்புகளையும் வெளியிடுவேன் என்று ரஜினி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கட்சி தொடங்க இருப்பதாக அவர் அறிவித்திருப்பதால், வரும் 29ஆம் தேதி சென்னை வந்துவிட்டு, பின்னர் ஓரிரு நாளில் ஹைதராபாத்துக்கு அவர் திரும்புவார் என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.