
மதுரை : மதுரை அருகே பரவையில் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மதுரை மாவட்ட செயலாளர் புல்லட் இராம்குமார் தலைமையிலும் மாநில மகளிர் அணி தலைவி அன்னலெட்சுமி சகிலா கணேசன் முன்னிலையிலும் தென்மாவட்ட பொறுப்பாளர் பாண்டியராஜன் உடன் இணைந்து, வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது, வேளாளர் பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு தாரை வார்க்க நினைக்கும் அரசியல்வாதிகளை கண்டித்தும் கோஷம் எழுப்பப் பட்டது. மேலும், நெல்லையில் பந்தல்ராஜாவை தாக்க முற்பட்ட ஜான்பாண்டியனை கண்டித்து உருவப் படத்தினை எரித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் அதிகமான பரவை கிராம வெள்ளாளர் மக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கண்டன குரல் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், திண்டுக்கல் மெயின் ரோடு போக்குவரத்தால் சுமார் 30 நிமிடம் ஸ்தம்பித்தது. பின்னர் ஆர்பாட்டகாரர்களை கைது செய்ய முற்பட்ட போது, போலீசாருக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டு சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
பிறகு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு பகுதியினர் கைது செய்யப்பட்டு 110 பேர் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்