
தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆதார் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.
விஷ்வ ஹிந்து பரிசத்தின் மாவட்டத் தலைவர் வன்னியராஜன் ஜி, தமிழ்நாடு துறவிகள் பேரவை மாநில பொறுப்பாளர் சரவண கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், இந்து அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிராக நடக்கும் செயல்களை கண்டித்தும் ஒருதலைப்பட்சமாக செயல்படும் காவல்துறையை கண்டித்தும் ஆதார் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் தற்போது நடைபெற்றன