
ஜனவரி மாதத்தில் ஜல்லிகட்டு, மே மாதத்தில் கயவர்களுடன் மல்லுக்கட்டு, ஆயத்தம் இல்லாமல் எந்த களத்திலும் இறங்க மாட்டேன், ம.நீ.ம ஆட்சிக்கு வந்தால் மதுரை 2 ஆம் தலைநகரமாக மாற்றப்படும் என்று மதுரையில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
மதுரையில், கமல்ஹாசன் ரசிகர்கள் சார்பாக கட்சியில் சேர்ந்த ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறியதாவது:
ம.நீ.ம ஆட்சிக்கு வந்தால் மது விற்பனை செய்யாது, மது விற்பனை தனியாரிடம் ஒப்படைக்கப் படும், பல் இல்லாத சக்கரங்கள் இயங்க சட்டம் போடுவது தான் என் முதல் கையெழுத்து என்றார்.

மக்கள் நீதி மய்யதின் சட்டமன்ற தேர்தல் முதல் கட்ட பிரச்சாரத்தை அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் மதுரையில் தொடங்கினார்.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மதுரை காமராசர் சாலையில் உள்ள தனியார் அரங்கத்தில் கமலஹாசன் மகளிர், இளைஞர்கள், மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினார், கமலஹாசன் பேசுகையில் “மதுரை குண்டும், குழியுமாக உள்ளது, மதுரையை 2 ஆம் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் கனவு, ஊழல் பேர் வழிகளை ஒழித்து கட்ட வேண்டிய நேரம், இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும், இளைஞர்களை முதலாளிகளாக மாற்ற வேண்டும்,
ஜனவரி மாதத்தில் ஜல்லிகட்டு, மே மாதத்தில் கயவர்களுடன் மல்லுக்கட்டு, அயத்தம் இல்லாமல் எந்த களத்திலும் இறங்க மாட்டேன், ம.நீ.ம ஆட்சிக்கு வந்தால் மதுரை 2 ஆம் தலைநகரமாக மாற்றப்படும், மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்யும் அரசை தான் நாம் அமைக்க வேண்டும், மக்கள் அரசியலை கையில் எடுக்க வேண்டும், மதுரை புரட்சிக்கு பெயர் பெற்றது நகரம், ம.நீ.ம அரசியல் மக்களை மையப்படுத்தியே உள்ளது,

ம.நீ.ம இளைஞர்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க வேண்டும், எங்களின் ஒரே வாக்குறுதி நேர்மை, அடுத்த வேலை உணவுக்கு ஏங்குபவனிடம் ஒட்டுக்கு 5 ஆயிரம் கொடுத்தால் வாங்க தான் செய்வான், 5 ஆயிரம் வாங்குபவனுக்கு தர வேண்டியது 5 இலட்சம், பேச வேண்டிய நேரம் முடிந்து விட்டது, செயல்பட வேண்டிய நேரம் வந்து விட்டது,
மக்கள் ஆணையிட்டால் ஆட்சி நமதாகும், நாளையும் நமதாகும், ஊழலை ஒழிப்பு தனி மனிதனால் செய்ய முடியாது, மக்களின் ஒத்துழைப்போடுநிச்சயம் ஊழலை ஒழிக்க முடியும், துன்பப்படும் மக்களை நான் பார்த்து விட்டு இறந்தால்,
எனக்கு நல்ல சாவு கிடைக்காது, ம.நீ.ம ஆட்சிக்கு வந்தால் மது விற்பனை செய்யாது, மது விற்பனை தனியாரிடம் ஒப்படைக்கபடும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வைத்து மது விற்பனை செய்யப்படுகிறது, ம.நீ.ம ஆட்சியில் விவசாயிகள் அங்கீகரிக்கப்படுவர்கள்,
ம.நீ.ம ஆட்சிக்கு வந்தால் பல் இல்லாத சக்கரங்கள் இயங்க சட்டம் போடுவது தான் என் முதல் கையெழுத்து, ம.நீ.ம ஆட்சிக்கு வந்தால் இலவசமாக குடிநீர் வழங்கப்படும்,
மாணவர்களை பொதி சுமக்கும் கழுதையாக மாற்ற கூடாது, நீட் தேர்வு ரத்து செய்யும் விவகாரத்தில் கல்வியாளர்களுடன் ஆலோசனை செய்து அறிவிப்பு செய்யப்படும்” என பதில் கூறினார்.