மூன்று ஹீரோக்களோடு களம் இறங்கும் பாலா – இசை யார் தெரியுமா?..

Published:

bala

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கென ரசிகர் வட்டாரத்தை உருவாக்கியவர் பாலா.

நடிகர் விக்ரம் மகனை வைத்து அவர் இயக்கிய வர்மா திரைப்படம் தயாரிப்பாளருக்கு பிடிக்காமல் போக, வேறு இயக்குனர் ‘ஆதித்ய வர்மா’ என்கிற பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டு வெளியானது. சில மாதங்களுக்கு முன்பு ‘வர்மா’ ஓடிடியில் வெளியானது. எனவே, தான் யார் என நிருபிக்கும் நிலையில் பாலா இருக்கிறார்.

இந்நிலையில், தற்போது அவர் உதயநிதி ஸ்டாலின், அதர்வா மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகிய மூவரும் நடிக்கவுள்ளனராம். குறிப்பாக இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img