
*சட்டமன்ற தேர்தலில் கூட்டணி நம்பி அதிமுக இல்லை மக்களை நம்பி உள்ளது. மக்கள்தான் எஜமானர்கள் என அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்தார்.
மதுரை பரவை பேரூராட்சியில் பொது சுகாதாரத்துறை சார்பில் அம்மா மினி மருத்துவமனையை அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, கியஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து கேள்வி கேட்கும் முக ஸ்டாலின் திமுக ஆட்சி காலத்தில் பெட்ரோல் விலை உயர்வானபோது என்ன செய்தார் என கேள்வி?திமுக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர நினைக்கிறது. அதிமுகவை அடிமை அரசு என கூற முக. ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை.
காங்கிரஸ் மத்தியில் அங்கம் வகித்த போது கனிமொழி, அ. ராசா ஆகியோர் கைது செய்யபட்டனர்.புதிதாக கட்சி துவங்கியுள்ள கமல்ஹாசனுக்கு நிதிநிலை, நிர்வாகம், சட்ட நுணுக்கங்கள் எப்படி என்பது தெரியாது.
கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை. எந்த அமைச்சர்களும் முதல்வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதில்லை.
அமைச்சர் பதவி என்பது முள் படுக்கையில் அமர்வது போன்றது, அமைச்சர்கள் மலர் படுக்கையில் அமரவில்லை. எங்கள் யாருக்கும் பிக்பாஸ் பார்க்க நேரமில்லை. கமல் எதை சொல்லியும் அதிமுக தொண்டர்களையும் பிரிக்க முடியாது.
கூட்டணியை நம்பி அதிமுக போட்டியிடுவதா என்ற கேள்விக்கு?கூட்டணியை நம்பி அதிமுக இல்லை மக்களை நம்பியே உள்ளது. அதிமுக தனித்து போட்டியிடுவதாக ஏற்கனவே சொல்லியிருக் கிறது.
அதிமுகவிற்கு கூட்டணி என்பது பெரிதல்ல மக்கள்தான் எஜமானார்கள்.மக்கள் எங்களை நம்புகிறார்கள் மக்களை நாங்கள் நம்புகிறோம். கூட்டணி என்பது வாக்குகள் சிதற கூடாது என்பதற்காகவே.
கூட்டணியில் இவர்கள் இருந்தால்தான் வெற்றி என்ற நிலைப்பாடு அதிமுகவிற்கு கிடையாது.அதிமுக அரசின் திட்டங்களை முன்னிறுத்தி மக்களை சந்திப்போம் என்று பேசினார்