
திருப்பரங்குன்றம் அருகே வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் தானாக எரிந்த எலெக்ட்ரிக் பைக்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வம் இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 29 )
கடந்த 28 நாட்களுக்கு முன்பு புதிதாக மின்சார எலக்ட்ரிக் பைக் வாங்கியுள்ளார். நேற்று இரவு பகல் 2 மணி அளவில் வீட்டில் வாசல் அருகே நிறுத்தி இருந்த போது தானாக வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
இதில் அருகிலுள்ள டூவீலர் பைக் வண்டிகளுக்கும் தீப்பற்றியது .
உடனே அருகில் உள்ளவர்கள் அவசரஅவசரமாக வாகனத்தை அப்புறப்படுத்தி உள்ளனர் .
இந் நிலையில் கிருஷ்ணவேணிக்கு சொந்தமான எலக்ட்ரிக் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்து எடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்