
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் அமைச்சர் செல்லூர் ராஜுவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் அம்மா கிளினிக் திறந்து வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ யாதவ சமுதாயத்தினரை அவமதித்து பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் தமிழ்நாடு யாதவர் சங்கம் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கோடிக்கும் அதிகமானோர் தங்கள் சமுதாயத்தில் இருப்பதாகவும்,வரும் தேர்தலில் முக்கிய வாக்கு வங்கியாக தங்கள் சமுதாயம் இருக்கும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.