
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் பாலமேட்டில் ஜன. 15-ம் தேதி வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
விழாவையொட்டி, பாலமேட்டில் பொது மகாலிங்க சுவாமி மடத்துக் கமிட்டி சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது. இதற்காக, பாலமேட்டில் பொது மகாலிங்கசுவாமி மடத்தில் ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு வரும் தை. 2ம் தேதி (15.1-20217 வெள்ளிகிழமை நடைபெறுவதையொட்டி, பாலமேடு கிராம பொதுமகாலிங்கமிட்டி ஆலேசனைக் கூட்டம் அதன் தலைவர் ராஜேந்திரன். செயலாளர் வேலு, பொருளாளர் மனோகரவேல் பாண்டியன. ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது .
இதில் , சிறந்த ஜல்லிகட்டு காளைக்கு மாருதி கார்டும். சிறந்த மாடுபிடி வீரர்க்கு 8 கிராம் (1 பவுன் தங்கம்) வழங்கப்படும் எனவும் மேலும், அண்டா, சைக்கிள் | வெள்ளி, தங்ககாசுகள் | பீரோ – கட்டில், உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்தனர்.
மதுரை அருகே பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக் கட்டு விழா வெகு சிறப்பாக நடைபெறும்.
பாலமேட்டில் மஞ்சமலை ஆற்றில் வாடிவாசல் அமைக்கப்பட்டும், பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டை மேடையிலிருந்து பார்க்க வசதி ஏற்படுத்தப்படும்.
சிறந்த காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு முக்கிய பிரமுகர்கள் பரிசுகளையும் வழங்குவர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை பாலமேடு போலீஸார், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆலோசனையின் பேரில் செய்து வருகின்றனர்.