
தமிழக கோவில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்படவேண்டும் என்று, சத்குரு ஜக்கி வாசுதேவ் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
“கோவில்களின் புனிதத்தன்மை சேதப்படுத்தாமல் பாதுகாக்க, அக்கோவில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்படவேண்டும்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம் சேதப்படுத்தப்படுகிறது. ஆலயங்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல” என்று கூறியுள்ளார்.
இதனிடையே இவரது கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழக பாஜக.,வின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பதிவில், இதைத்தான் நாங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.