இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: 93 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

சற்றுமுன் விளையாட்டு

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

கட்டாக்கில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் 3 இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ராகுல் 61 ரன்களும், தோனி 39 ரன்களும், மணீஷ் பாண்டே 32 ரன்களும் எடுத்தனர்.

181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியினர் இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் 16 ஓவர்களில் 87 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இலங்கை அணி ஆட்டமிழந்தது.

இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சகால் 4 பாண்டியா 3 குல்தீப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை பெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.