சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவின்போது, தங்கள் வாக்குகளைப் பதிவிட்டு செய்தியாளர்களிடம் சிலர் தங்கள் விரல்களைக் காட்டினர்.
திமுக., வேட்பாளர் மருது கணேஷ் இன்று காலையிலேயே சாவடியில் நின்று, தனது வாக்கைப் பதிவு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்று சொன்னார்.
இதனிடையே அனைத்து வாக்குச் சவடிகளிலும் அதிக பட்ச காவலர்கள் நிறுத்தப் பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார், காவல் ஆணையர் விஸ்வநாதன். இன்று காலை வாக்குச் சாவடிகளை ஆய்வு செய்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.



