
தல அஜித் குமார் தனது எளிய பண்பாலும் அடுத்தவர்களுக்கு உதவும் மனத்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.
வலது கையினால் செய்யப்படும் உதவி இடது கைக்கு தெரியக்கூடாது என நினைப்பவர் தல. அதனால்தான் அஜித்குமார் பலருக்கு செய்யும் உதவிகள் மீடியா வெளிச்சத்தில் படாமலேயே நடந்துவருகின்றன.
இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் தங்கியிருந்தபோது சாலையோர இட்லி வியாபாரி ஒருவரின் வறுமை நிலையைக் கண்ட ‘தல’,அவரது குழந்தைகளின் படிப்பு செலவிற்காக ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
மேலும் சில நாட்கள் அந்த இட்லி கடைக்கு இரவு நேரங்களில் அஜித்குமார் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.