
திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோயில் என்ற பெயரில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.க்கு கோயில் கட்டப்படுகிறது.
இதில் இருவருக்கும் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஜன.30 ல் கும்பாபிசேகம் நடக்க உள்ளது.
இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.