
தெலுங்கு சினிமாவின் 4 முன்னணி இயக்குனர்கள் ஒன்று கூடி ” லஸ்ட் ஸ்டோரீஸ்” வெப் தொடரின் தெலுங்கு ரீமேக்கான “பிட்ட கதலு” தொடரை இயக்கியுள்ளனர். பாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான ஜோயா அக்தர், அனுரக் காஷ்யப், கரண் ஜோஹர் மற்றும் திபாகர் பானர்ஜி இணைந்து இயக்கிய லஸ்ட் ஸ்டோரீஸ் அமோக வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே.

அந்த தொடரின் மூலம் தான் வெப்சீரிஸ்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகரிக்கவும் ஆரம்பித்தது. இந்நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் 4 பேர் அமலா பால், ஸ்ருதி ஹாசன், ஜகபதி பாபு, ஈஷா ரெப்பா மற்றும் லக்ஷ்மி மஞ்சு ஆகியோரை வைத்து உருவாக்கியுள்ள பிட்ட கதலு டீசரை யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.
காதல்… காமம்… துரோகம் என பாலியல் ரீதியான அத்தனை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் விதத்தில் உருவாகியுள்ள இந்த தொடர் வருகிற காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 19ம் தேதி நெட்பிலிக்சில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. டீசர் வீடியோ…