மே 7, 2021, 2:58 காலை வெள்ளிக்கிழமை
More

  வேலூர் இப்ராஹிம் மீது தாக்குதல்: அர்ஜுன் சம்பத் கண்டனம்!

  வேலூர் இப்ராஹிம் அவர்களையும் அவரது குடும்பத்தாரையும் தாக்கி கொலை செய்ய முயற்சி!

  arjunsampath
  arjunsampath

  இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது…

  வேலூர் இப்ராஹிம் அவர்களையும் அவரது குடும்பத்தாரையும் தாக்கி கொலை செய்ய முயற்சி!

  முன்கூட்டியே தங்களது முகநூல் பதிவுகள் வழியாக இத்தகைய வன்முறை தாக்குதலை நடத்தப் போகிறோம், என அறிவித்து காவல்துறைக்கும் தகவல் தெரிந்தும் வேலூர் இப்ராஹிம் கொடைக்கானலில் தாக்கப்பட்டுள்ளார்.

  நாம் தமிழர் கட்சி மற்றும் இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புக்கள் இரண்டு வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்து குடியரசு தின விழாவில் பங்கேற்ற வேலூர் இப்ராஹிம் கடுமையாக தாக்கி உள்ளார்கள். அவரது தனி பாதுகாவலர் காவல் துறையை சார்ந்த வர்களும் தாக்கப்பட்டிருக்கிறார்கள்

  பி.எஸ்.ஒ. ஒருவருக்கு ஏழு தையல்கள் போடக்கூடிய அளவிற்கு தலையில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இப்ராகிம் அவர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது வேலூர் இப்ராஹிமை காப்பாற்ற முயற்சி செய்த காவல்துறையினரும் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

  போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மாவட்ட காவல்துறை அலட்சியம் செய்த காரணத்தினால் இந்த கொடும் தாக்குதல் நடைபெற்று இருக்கிறது.

  முன்கூட்டியே தகவல் தெரிந்தும் காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் தமிழக காவல்துறைக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

  தற்போது தாக்குதல் நடத்தியவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டபங்களில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க தமிழக போலீசாருக்கு விடப்பட்டு இருக்கின்ற சவால். தமிழக போலீசார் வெட்கித் தலைகுனிய வேண்டும். காவல்துறை அதிகாரிகளையும் வேலூர் இப்ராஹிமையும் தாக்கி காயப்படுத்தி உள்ள வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இந்த தாக்குதலுக்கு காரணமான நாம் தமிழர் கட்சி எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, உள்ளிட்ட அமைப்புகளை தடை செய்ய வேண்டும்.

  இந்தத் தாக்குதலை கொடைக்கானலில் உள்ள ஜமாத்தார்கள் கண்டித்திருக்கிறார்கள்.

  மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இது விஷயத்தில் நேரடியாக கவனம் கொடுத்து தமிழக காவல்துறைக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்த அவமானத்தை சரி செய்ய வேண்டும்.

  வன்முறையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட நாம்தமிழர், எஸ்டிபிஐ கட்சியினரை தடைசெய்ய வேண்டும். இந்த தாக்குதலில் தொடர்புடைய மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள அத்தனை பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும்.

  வேலூர் இப்ராஹிம் மீது நடந்து இருக்கின்ற தாக்குதலை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்நிலை தொடருமானால் ஜனநாயக அறவழி போராட்டங்களை இந்து மக்கள் கட்சி நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,234FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,156FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »