திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்தகீழப்பாவூரில் உள்ள நரசிம்மர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை ராம நாம பஜனையும், உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது. மாலை பரம பத வாசல் திறக்கப்பட்டது. பின்னர் திருக்கோயிலின் வெளிப்பிரகாரத்தில் பக்தர்களால் 1008 அகல் விளக்கு தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் பெருமாள் தெப்பக்குளத்தை 3 முறை வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Popular Categories



