தான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம் என்று கூறினார் நடிகர் ரஜினி காந்த். சென்னை ராகவேந்திர கல்யாண மண்டபத்தில் 6வது நாளாக ரசிகர்களைச் சந்தித்து வரும் ரஜினி காந்த், இன்று தனது அரசியல் நிலைப் பாட்டை அறிவிப்பதாகக் கூறியிருந்தார். அதன்படி, தான் தனிக் கட்சி தொடங்கப் போவதாகக் கூறினார்.
அவர் பேசியதில் சில துளிகள்…
கடமையை செய், மற்றதை நான் பார்க்கிறேன் என்றார் கண்ணன். யுத்தம் செய், வெற்றி பெற்றால் நாடாள்வாய் யுத்தத்தில் தோற்றால் இறப்பாய் யுத்தம் செய்யாவிட்டால் கோழை என்பார்கள்
நான் அரசியலுக்கு வருவது உறுதி. நான் பில்ட்அப் கொடுக்கவில்லை, தானாக ஆகிவிட்டது
எனக்கு அரசியல் கூட பயமில்லை, மீடியாவை பார்த்தால்தான் பயம்.
பெரிய ஜாம்பவான்களே மீடியாவை பார்த்து பயப்படுகிறார்கள், நான் குழந்தை.
சோ சார் எனக்கு மீடியாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என பயம்காட்டி வைத்திருந்தார். இப்போது சோ இருந்திருந்தால் எனக்கு 10 யானை பலமாக இருந்திருக்கும். சோ ஆத்மா எனக்கு பலமாக இருக்கும். கட்டுப்பாடு ஒழுக்கம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம்.
6 நாளில் 6000 ரசிகர்கள் போட்டோ ஷூட்டில் பங்கேற்றனர்.
ரொம்ப பில்ட் அப் கொடுத்துவிட்டோம் என்று நினைக்கிறேன்.
எனக்கு மீடியா பார்த்தால் தான் பயம். அரசியல் பார்த்தால் பயம் இல்லை.
மற்றபடி நான் அரசியலுக்கு வருவது உறுதி. இதுகாலத்தின் கட்டாயம். வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் தனி கட்சி ஆரம்பித்து போட்டியிடுவேன்.
பதவிக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல –
அப்படி பதவி ஆசை இருந்திருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்னரே நான் நாற்காலியில் அமர்ந்திருப்பேன்.
நான் இப்போது அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பது ஜனநாயக ரீதியாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.
அரசியல் கெட்டு போய்விட்டது. அனைத்து சிஸ்டத்தையும் மாற்ற வேண்டும்.
ஆண்டவனின் அருளும் மக்களின் நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும். இது இரண்டும் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்
அரசியல் கட்சி ஆரம்பிக்கும் வரை அரசியல் பேச மாட்டேன்.
அதுவரை கிராமம், நகர பகுதிகளில் மன்றங்கள் வலுப்படுத்தும் பணி நடைபெறும்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கட்சி தொடங்கி கட்சியின் செயல் திட்டங்களை அறிவிப்பேன்.
ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வரை நான் அரசியல் பேசமாட்டேன்.
கட்சி துவங்கும் வரை ரசிகர்களும் அரசியல்வாதிகளை திட்டக் கூடாது.
கட்சி சிஸ்டத்தையே மாற்ற வேண்டும், வேர், கிளை போன்ற அனைத்துமே தொண்டர்கள். எனக்கு தொண்டர்கள் வேண்டாம், காவலர்கள் வேண்டும்.
காவலர்கள் உதவியோடு ஆட்சியமைத்தால், அரசிடமிருந்து உதவிகள் மக்களை சென்றடையும். யார் தப்பு செய்தாலும் தட்டிக் கேட்கும் காவலர்கள் வேண்டும்.
தகுந்த பதவிக்கு தகுந்த ஆளை நியமித்து வேலை பார்க்கிறார்களா என்பதை கண்காணிப்பதே எனது வேலை.
பதிவு செய்யாத மன்றங்களையும் பதிவு செய்து ஒருங்கிணைக்க வேண்டும். இது சினிமா இல்லை. நாம் காவலர்களாய் மாறப்போகிறோம், நாம் மட்டும் போதாதது.
பெண்கள், இளைஞர்கள் அனைவரையும் நமது மன்றத்திற்கு கொண்டு வர வேண்டும்
வரும் சட்டசப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து போட்டி
கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடிப்பது நடுக்கடலில் முத்தெடுப்பதை போன்ற கஷ்டமானது. ஆண்டவன் அருள், மக்கள் அன்பு, ஆதரவு இருந்தால்தான் இதை சாதிக்க முடியும்.
இரண்டுமே எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது
என்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றால் அந்தக் குற்ற உணர்வு என்னை துரத்தும்.
எல்லாவற்றையும் மாற்றனும், நேர்மையான, வெளிப்படையான ஆன்மீக அரசியலை கொண்டுவர வேண்டும்
45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை இல்லை 68 வயதில் பதவி ஆசை வருமா? அப்படி வந்தால் நான் பைத்தியக்காரன்.
நான் ஆன்மீகவாதி என கூறுவதற்கு தகுதியற்றவன். பதவி ஆசை இருந்திருந்தால் 1996லேயே பதவி என்னை தேடி வந்தது.
உண்மை உழைப்பு உயர்வு இதுதான் தாரக மந்திரம்.
நல்லதே நினைப்போம் நல்லதே பேசுவோம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும் இதுதான் நம் கொள்கை.
வரும் சட்டமன்றத் தேர்தலில் நம் படையும் இருக்கும்.



