கேரளா வழியாக அகஸ்தியர் கூடம் செல்ல ஜனவரி 5ல் முன்பதிவு ஆரம்பம்.கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பு..!
★அகஸ்திய முனிவர் தவம் செய்த அகஸ்தியர் கூடம் கடல் மட்டத்திலிருந்து 1890 மீட்டர் உயரத்தில் உள்ளது .மேற்கு தொடர்சி மலையில் கேரள வனப் பகுதியான நெய்யார் வனப் பகுதியில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் போனக்காடு வன எல்லையிலிருந்து 56 கி.மீ தூரம் அடர்ந்த காட்டு பகுதியான மலை ஏறி சன்னதி செல்ல வேண்டும்.
★வருடத்தில் சிவராத்திரி நாள் ஆதிவாசி மக்கள் வழங்கும் சிறப்பு பூஜை பிரசத்தி பெற்றதாகும். சிவராத்திரிக்கு முன்னதாக குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே இப்பகுதிக்கு பொது மக்கள் அனுமதிக்கப்படுவர்.
★2018ம் ஆண்டிற்கான அகஸ்தியர் கூட புண்ணிய யாத்திரை தற்போது ஆரம்பிக்க உள்ளது. கேரள வனத்துறை அனுமதி பெற்றவர்களை மட்டுமே மலை ஏற முடியும். அடர்ந்த வனப்பகுதி என்பதால் பாதுகாப்பு கருதியும், காட்டுப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாலும் மக்கள் அனுமதிக்கப்படுவதில் வனத்துறை கட்டுபாடு விதித்துள்ளது.
★தினம் 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதுவும் குழுக்களாக பிரிக்கப்பட்டு வனத்துறை பணியாளர் தலைமையில் பயணிக்க வேண்டும்.
மிகவும் கடினமான அகஸ்தியர் கூடம் புண்ணிய யாத்திரைக்கு பெண்கள் அனுமதி இல்லை
★இதற்க்கு முன் பதிவு வரும் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி காலை 11:00 மணி முதல் துவங்குகிறது.
serviceonline.gov.in
www.forest.kerala.gov.in
ஆகிய இணைய தளங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்ய கால அவகாசம் உள்ளதால் முன்கூட்டியே தங்கள் கணக்கை பதிந்து வைத்து விடவும்.பின்னர் முன்பதிவு செய்யும் நாளில் உடனடியாக முன்பதிவு செய்யலாம்.
கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பின்படி இந்த ஆண்டு பொதிகை பயணம் ஜனவரி14 முதல் பிப்ரவரி 13 வரை நடை பெறும். அடையாள அட்டை கட்டாயம் கொண்டு வரவேண்டும்
புகை பிடிப்பது மற்றும் மது அருந்துதல் தடை செய்யப் பட்டுள்ளது
பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அனுமதி இல்லை
ஒன்று முதல் ஐந்து நபர்களுக்கு 30ரூபாய் கட்டணம் (ஒரு தலைக்கு)
பத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு 40ரூபாய் கட்டணம் (ஒரு தலைக்கு)
பத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு அல்லது குழுவாக வருபவர்களுக்கு கைடு வசதி செய்து தரப்படும். ஒரே நபரே மொத்த குழுவிற்கும் பதிவு செய்யலாம்.



