காதலிக்க மறுத்ததால் தீ வைத்த இளைஞன்! வைத்தவனை கட்டி தழுவிய இளம்பெண்!

சற்றுமுன்
fire bath 1
fire bath 1

திருமணத்திற்கு மறுத்த காதலிக்கு இளைஞர் தீ வைத்ததில் அந்த பெண் ஓடி வந்து நீ வைத்தவனை கட்டிப்பிடித்துள்ளார். இதனால் இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மும்பையின் மேற்கு பகுதியில் உள்ள ஜோகேஷ்வரி பகுதியில் வசித்து வருபவர் விஜய் காம்பே. இவர் தனது அண்ணியின் சகோதரியை இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். மது அருந்தும் பழக்கம் உள்ள விஜயை அந்த பெண் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. மேலும் இது குறித்து அந்த பெண்ணின் பெற்றோரிடம் விஜய் விருப்பம் கேட்டும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால் மிகுந்த ஆத்திரமடைந்த விஜய் அந்த பெண்ணிற்கு பல வகைகளில் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் மன ரீதியாக பாதிக்கப்பட்ட அந்த பெண் கடந்த வாரம் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பியுள்ளார்.

மீண்டும் தன் காதலியை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது காதலி மட்டும் வீட்டில் இருக்க மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். இதற்கு அந்த பெண் திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கவே தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை காதலி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். மேலும் அவர் வெளியே வந்து விடாமல் இருக்க வீட்டின் வாசல் முன்பு நின்றுள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் விஜய்யையும் சேர்த்து கட்டி பிடித்துள்ளார். இதனால் இருவரும் அலறிக்கொண்டே வெளியே ஓடி வர அக்கம்பக்கத்தினர் பார்த்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விஜய் சிகிச்சை பலனனின்றி உயிரிழந்துவிட்டார். அந்த பெண் 80 சதவிகித காயங்களுடன் தொடர்ந்து உயிருக்குப் போராடி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.