ரேஷன் கடையில் இவர்களை அனுமதித்தால் கடும் நடவடிக்கை! உணவுத்துறை எச்சரிக்கை!

சற்றுமுன் தமிழகம்
ration shop madurai
ration shop madurai

தமிழகத்தில் சுமார் 33,000 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளை உணவுத்துறையின் கீழ் வரும் உணவு வழங்கல் துறை கண்காணித்து வருகிறது.

இந்த சூழலில் பல்வேறு ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் கூடுதல் பணிச்சுமையை சமாளிக்க சில ஊழியர்கள், தங்களுக்கு வேண்டிய சிலரை பணியில் அமர்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் ரேஷன் கடைகளில் வெளிநபர்களை பணிக்கு அனுமதிக்க கூடாது என்று உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் ரேஷன் கடை ஊழியர்கள் ஐடி கார்டு அணிவதுடன் கடையையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.