
மனைவியின் சிதையில் குதித்த கணவன் குறித்து மகாராஷ்டிராவில் பரிதாபத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி சரியாக மூன்று மாதங்கள் மட்டுமே ஆகிறது. மகிழ்ச்சியாக தொடரவேண்டிய அவர்களின் வாழ்க்கை பாதியிலேயே முடிந்து போனது.
மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாள். அவளுடைய உடலுக்கு அந்திமக் கிரியைகள் நடக்கும்போது அந்த சிதி நெருப்பிலேயே கணவனும் குதித்தான்.
இந்த சோக சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள பாங்க்ராம் தலோதி கிராமத்தில் திங்களன்று நடந்தது.

கிஷோர் பாதிக் என்ற இளைஞன் ருசிதா சிட்டாவர் என்ற பெண்ணை இந்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுடைய வாழ்க்கை நன்றாகத்தான் நடந்து வந்தது. ருசிதா தற்போது மூன்று மாத கர்ப்பிணி.
உடல் நிலை சரியில்லாமல் இருந்த தன் தாயை பார்ப்பதற்காக நான்கு நாட்கள் முன்பு ருசிதா தன் பிறந்த வீட்டுக்குச் சென்றாள். தன் மனைவியை வீட்டுக்கு திரும்ப அழைத்து வருவதற்கு கிஷோர் ஞாயிறன்று மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது ருசிதா வீட்டில் இல்லை.
அவள் வீட்டில் காணப்படவில்லை என்று தெரிந்து கொண்ட குடும்பத்தினர் சுற்றுப்புறங்களில் தேடினார்கள். கிராமத்திற்கு சமீபத்தில் உள்ள கிணற்றில் ருசிதாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனால் கிஷோரோடு கூட அவளுடைய பெற்றோரும் சோகக் கடலில் மூழ்கினர்.
ருசிதாவின் அந்திம கிரியை திங்களன்று நடத்தினார்கள். அவளுடைய சிதிக்கு நெருப்பு வைத்த சிறிது நேரத்திற்குள் கிஷோர் கூட அந்த சிதியில் குதித்துவிட்டார். அங்கிருந்தவர்கள் அதனைப் பார்த்து அவரைப் பிடித்து இழுத்து காப்பாற்றி னார்கள். மீண்டும் சற்று நேரத்துக்கெல்லாம் தன் மனைவி தற்கொலை செய்துகொண்ட கிணற்றருகில் சென்ற அதற்குள் குதித்துவிட்டார். இதனால் அவர் இறந்து போனார்.
ஆனால் ருசிதாவின் தற்கொலைக்கான காரணங்களை அறிய வேண்டியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொண்ட போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.