
டேராடூனில் ஒரு பாலத்தின் மீது அதிக பாரம் உள்ள வாகனம் சென்றபோது அந்தப் பாலம் உடைந்து விழுந்தது. டேராடூன் அருகிலுள்ள எல்லைப்பகுதியில் திங்களன்று இந்த சம்பவம் நடந்தது.
எல்ஏசி க்கு 65 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிதொராகட் மாவட்டத்தில் முன்சியாரி என்ற இடத்தில் ரிவுலேட் என்ற நதி மீது பைலீ பிரிட்ஜ் உள்ளது.
இந்த பாலம் பலவீனமாக இருப்பதாக உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு எச்சரித்த போதிலும் மிக அதிக பாரமான போக்லைனை சுமந்து கொண்டு ஒரு லாரி அந்த பாலத்தின் மீது சென்றது . அதனால் அந்தப் பாலம் உடைந்து விழுந்ததால் லாரி சாய்ந்தது.
அந்த வாகனத்தில் இருந்த இருவர் காயமடைந்தனர். காயமடைந்த அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பியதாக போலீசார் தெரிவித்தனர். டிரைவர் கோதான் நிலைமை சீராக உள்ளது என்றும் பஞ்சாபைச் சேர்ந்த லக்குபீர்சிங் உடல்நிலை சீரியசாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் பாலத்தை மறுபுறத்தில் இருந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த வாகனத்தை அங்கிருந்து அகற்றிய பின்பு ஒரு வார காலத்திற்குள் பாலத்தை மராமத்து செய்தபின் மீண்டும் போக்குவரத்து நடக்குமென்று எல்லை போக்குவரத்து அமைப்பு அதிகாரிகள் குறிப்பிட்டார்கள்.