‘இஸ்ரோ’வின் தலைவராக உள்ள கிரண் குமார் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, ‘இஸ்ரோ’ புதிய தலைவராக பிரபல விஞ்ஞானி கே.சிவன் நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகளுக்கு அவர் இப் பொறுப்பை வகிப்பார். விஞ்ஞானி கே.சிவன், தமிழ்நாட்டில் நாகர்கோவில் அருகே உள்ள வல்லங் குமாரவிளையை சேர்ந்தவர். சென்னையில் உள்ள எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில், ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங்கில் பட்டம் பெற்றார். பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மையத்தில் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங்கில் முதுகலை பட்டமும் மும்பை ஐ.ஐ.டி.யில் ஏரோஸ்பேஸ் என்ஜினீ யரிங்கில் பிஎச்.டி. பட்டம் பெற்றார். 1982–ம் ஆண்டு, இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார். பி.எஸ். எல்.வி. திட்டத்தில் பணியாற்றினார். பல்வேறு பத்திரிகைகளில் விஞ்ஞான கட்டுரைகள் எழுதி உள்ளார். விஞ்ஞானி கே.சிவன், தற்போது, திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
Popular Categories



