kusboo
kusboo

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி கேரளா, புதுச்சேரி, தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கேரளாவில் மீனவர்களுடன் உரையாடினார். அப்போது அவர்களுடன் கடலுக்குச் சென்று மீன்பிடித்தார். திடீரென கடலில் குதித்து நீந்தினார்.

நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சிறுவர்கள், இளைஞர்கள், இளம் பெண்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார். அப்போது ஒரு இளம் பெண்ணுடன் போட்டியாக புஷ் அப் எடுத்தார்.

Rahul
Rahul

இந்த நிலையில் ராகுல் காந்தியின் செயல்பாடுகளை பா.ஜனதா கட்சியின் குஷ்பு விமர்சனம் செய்துள்ளார்.

ராகுல் காந்தி குறித்து குஷ்பு கூறுகையில் ”கடலில் குதிப்பது, குஸ்தி எடுப்பது நல்ல தலைவருக்கு அழகு அல்ல. என்ன திட்டத்தை கொண்டு வருவோம் என மக்களிடம் சொல்ல வேண்டும்” என விமர்சனம் செய்தார்.

மேலும், நிதியாண்டின் தொடக்கம் மற்றும் இறுதியில் எரிபொருள் விலை உயர்வது இயல்பு” என்றார்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending