ஓடும் பேருந்தில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த இளைஞர்! சக மாணவர்கள் கையால் வாங்கிய தர்ம அடி!

சற்றுமுன் தமிழகம்
bus 1 - 2026

ஆம்பூரில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு தர்மஅடி கொடுத்த சக மாணவர்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள பள்ளிகொண்டா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 3 மாணவிகள் பேருந்தில் ஆம்பூருக்கு பயணம் செய்து உள்ளனர். பயண களைப்பில் மாணவிகள் அயர்ந்து தூங்கியபடி வந்துள்ளனர். அப்போது அருகில் உள்ள இருக்கையில் பயணித்த நபர் அந்த மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் கூச்சலிடவே பேருந்தில் பயணித்த சக மாணவர்கள் மற்றும் பயணிகள் அந்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பேருந்து ஆம்பூர் வந்தடைந்தவுடன் அந்த இளைஞரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் ஆம்பூர் பேருந்து நிலைய பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.