தல பிறந்தநாளுக்கு அந்த படம் ப்ளீஸ்.. வேண்டுகோள் வைத்த வெங்கட்பிரபு!

Published:

ajith - 2026

கடந்த ஒரு வருடமாக உலுக்கி வரும் கொரோனா பரவல் காரணமாக சினிமாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னரும் மக்கள் திரையரங்குகளுக்கு வருவதற்கு தயக்கம் காட்டினர். சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை தவிர, எந்த படங்களும் சரிவர ஓடாததால் திரையரங்குகள் கடும் பாதிப்பை சந்தித்தது.

இந்தநிலையில், மக்களை மீண்டும் திரையரங்குகளுக்கு வரவழைக்கும் நோக்கத்தில் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை போன்ற படங்கள் மீண்டும் வெளியாகி வரவேற்பை பெற்றன. கடந்த வாரம் அஜித்தின் பில்லா படம் ரீ ரிலீஸ் ஆனது.

இந்தநிலையில் தல அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன “மங்காத்தா” படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய இயக்குநர் வெங்கட் பிரபு அப்படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரிக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.

mankatha - 2026

இதுகுறித்து இயக்குநர் வெங்கட் பிரபு அவரது ட்விட்டர் பக்கத்தில், தயா அழகிரி சார் தல 50-வது பிறந்தநாளையொட்டி நம்ம தலயின் 50 வது படமான மங்காத்தாவை எப்படியாவது ஏப்ரல் 30 ஆம் தேதி ரீ-ரிலீஸ் பண்ணா, ஃபேன்ஸ் நாங்க உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டிருப்போம். பாத்து செய்ங்க” என கோரிக்கை வைத்துள்ளார்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Related articles

Recent articles

spot_img