ஆட்டோவில் பயணித்த அ‌ஜித்! வைரல் வீடியோ!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
ajith 1 - 2026

தல அஜித் எது செய்தாலும், அதனை அவரது ரசிகர்கள் வைரலாகி விடுவார்கள். அந்த வகையில் தற்போது தல அஜித் ஆட்டோவில் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தல அஜித் தன்னுடைய சொந்த விஷயங்களுக்காக வெளியில் செல்லும்போது , ஆடம்பர சொகுசு கார் இருந்தும் அதனை தவிர்த்து மிகவும் எளிமையாக கால்டாக்ஸி, போன்றவற்றில் தான் பயணிக்கிறார்.

சமீபத்தில் கூட துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கு பழைய கமிஷ்னர் அலுவலகத்தில் அமைந்துள்ள ரைபிள் கிளப்பிற்கு வந்தபோது, கால் டாக்ஸியில் வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இந்த விஷயம் மிகவும் வைரலாக பார்க்கப்பட்டதுடன், ஏன் அஜித் கால் டாக்சியில் வர வேண்டும் என்கிற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.

அதே போல், ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த போது, பட குழுவினருடன் சேர்ந்து அஜித் சுமார் 30 கிலோமீட்டர் வரை சைக்கிளிங் செய்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இவற்றை தொடர்ந்து, தற்போது ஆட்டோவையும் விட்டு வைக்கவில்லை தல.

அஜித் சமீபத்தில், ஆட்டோவில் சென்ற வீடியோ ஒன்றை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அஜித் கருப்பு நிற பேண்ட் மற்றும் டீ- ஷர்ட் அணிந்து, முகத்தில் மாஸ்க்குடன் அஜித் ஆட்டோவில் பயணிக்கிறார். இதனை அருகே சென்ற ஒருவர் வீடியோவாக எடுத்து எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக அவ்வளவாக வெளியவே தலைகாட்டாமல் இருந்த அஜித், கடந்த சில மாதங்களாக அதிகம் வெளியில் தலை காட்டவும் துவங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ‘வலிமை’ அப்டேட் கேட்டு வரும் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அஜித்தின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புரமோஷன் பணிகள் தொடங்க இருப்பதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மே மாதம் முழுவதும் ‘வலிமை’ குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியான செய்தி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.