
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை – மேலக்காடு பகுதியில் உட்புறசாலை விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று சாலை பணிகள் நடந்து வருவதால் அப்பகுதியில் சாலையை தோண்டி ஊராட்சி சார்பில் குடிநீர்இணைப்பு வழங்குவதற்காக அதே பகுதியில் உள்ள தொழிலாளர்கள் பள்ளம் தோண்டி உள்ளனர்.
அப்போது பழமையான செப்பு பாத்திரங்கள் கிடைத்துள்ளன. இதில் ஒன்று இரண்டு உருளை வளையத்துடன் மற்றொன்று ஒரு உருளை வளையத்துடன் இந்த செப்பு பாத்திரங்களாக காணப்படுகிறது.
அதனுடன் ஒரு கல் அம்மியும் பூமியிலிருந்து கிடைத்துள்ளது. இதனைகண்டதும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து பார்த்தனர்.
தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்குவந்த விஏஓ மாதையன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டெடுக்கப்பட்ட கல் அம்மி உட்பட பாத்திரங்களை மீட்டு திருத்துறைப்பூண்டி தாசில்தார்அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.