ஆடையின்றி அழுகிய நிலையில் இளம்பெண் சடலம்! கொள்ளிடக்கரையில் பரபரப்பு!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
tanjur - 2026

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் ஒருவர் புதைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி, வட்டாட்சியர், விஏஓ ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அதிகாரிகள் முன்னிலையில் அந்த உடல் தோண்டி எடுக்கப்பட்டது. ஆடை இல்லாமல் அழுகிய நிலையில் இருந்த அந்த பெண்ணுக்கு 25 வயது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இளம்பெண் சடலத்தை மருத்துவர்கள் அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் , இளம்பெண் யார், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாரா? கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.