எல்லோரையும் கவரும் வலிமை: போனி கபூர்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
valimai
valimai

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் அஜித் ரசிகர்கள் மற்றும் பொதுவான சினிமா ரசிகர்கள் என அனைவரையும் கவரும் என தயாரிப்பாளர் போனி கபுர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேஷியும் வில்லனாக நடிகர் கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர்.

ponikapoor 2 - 2026

இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் மே மாதத்தில் இருந்து தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தை பற்றி பாலிவுட் இணையதள ஊடகம் ஒன்றுக்கு பேசியுள்ள போனி கபூர் வலிமை படம் ஒவ்வொரு அஜித் ரசிகரையும் கவரும் விதமாக இருக்கும். சொல்லப்போனால் அஜித் ரசிகர்கள் இல்லாத பொதுவான சினிமா ரசிகர்களையும் கவரும் விதத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.