ஏப்ரல் 22, 2021, 4:08 மணி வியாழக்கிழமை
More

  வாக்காளர் கவனத்திற்கு.. இப்படி பண்ணினால் சிறை!

  vote - 1

  வாக்காளர்கள் தான் வாக்களித்த பிறகு வேறு ஒரு சின்னத்தில் பதிவாகின்றது என்று கூறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  தேர்தலில் வாக்களிக்க செல்லும் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வாக்களிக்கும் நபர், தனது வாக்கை பதிவு செய்தவுடன், அவர் யாருக்கு அல்லது எந்த சின்னத்திற்கு வாக்களித்தார் என்ற விவரம் அச்சாவதை, பார்வையிடும் வசதி கொண்ட, வி.வி.பி.ஏ.டி இயந்திரம் அனைத்து வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ளது.

  வாக்களிக்கச் செல்லும் வாக்காளர் தன்னுடைய ஓட்டை செலுத்திய பிறகு தான் யாருக்கு வாக்களித்தோம் அவரது பெயரோ அல்லது சின்னமும் தெரியாமல் வேறு ஒரு நபரின் பெயர் அல்லது சின்னம் அங்கு பொருத்தப்பட்டுள்ள இயந்திரத்தில் தெரிந்தால் உடனே சம்பந்தப்பட்ட ஓட்டு சாவடி தலைமை அலுவலகம் உரிய படிவத்தில் புகார் செய்ய வேண்டும்.

  பின்னர் அந்த ஓட்டுச்சாவடி அலுவலர் அந்த முகவர்களுடன் ஓட்டளிக்கும் பகுதிக்கு சென்று அந்த நபரை மீண்டும் முகவர்களுக்கு முன்பாக மீண்டும் ஒரு ஓட்டு பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். அந்த நபர் யாருக்கு ஓட்டளித்தார் என்பதை, 17ஏ மற்றும் 17 சி படிவத்தில் பதிவு செய்ய வேண்டும்.

  மேலும் அவருக்கு மீண்டும் கொடுக்கப்பட்ட வாய்ப்பில் தவறு ஏதும் நடக்கவில்லை என்றால் அந்த வாக்காளர் வேண்டும் என்று பொய் கூறி தவறான புகார் கொடுத்ததாக கருதி உடனே அந்த நபரை போலீசாரிடம் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் ஒப்படைக்க வேண்டும் பின்னர் அந்த நபருக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க கூடும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

  ஒருவேளை அந்த வாக்காளர் கூறியதுபோலவே அவர் பதிவிட்ட சின்னம் அல்லது வேட்பாளரின் விவரம் மாறி பதிவானால் ஓட்டுப்பதிவை சம்பந்தப்பட்ட தலைமை அலுவலர் உடனடியாக நிறுத்த வேண்டும்.

  மேலும் இதுகுறித்து உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.எனவே வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்க செல்லும்போது இதுபோன்ற விஷயங்களில் முன்னெச்செரிக்கையுடன் கவனமாக இருக்கவேண்டும்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »