ஒரே நம்பர்.. இரு இன்னோவா.. குழப்பத்தில் வட்டார அலுவலக அதிகாரிகள்!

inovo car - 2026

சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ஒரே நம்பர் பிளேட்டில் உள்ள இரண்டு இன்னோவா கார்கள் வந்ததால் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் குழப்பமடைந்தனர். மோசடி கும்பலை பிடிக்க போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி அழகாபுரத்தைச் சேர்ந்த முத்துதுரை, தூத்துக்குடியைச் சேர்ந்த உமாதேவியின் பழைய இனோவா காரை (டி.என்.69 ஏஎம் 4777) ரூ.10 லட்சத்திற்கு கடந்த வாரம் வாங்கினார். கார் உரிமையாளரின் பெயரை மாற்றுவதற்காக முத்துதுரை தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகதிற்கு சென்றனர்.

ஆனால் இதே நம்பர் பிளேட் உள்ள காரை சிவகங்கையைச் சேர்ந்த முத்துகணேஷ் என்பவருக்கு சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்துள்ளதாக அதிகாரரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துதுரை, காரை விற்பனை செய்த உமாதேவியை அழைத்துக் கொண்டு சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்தார். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் புகார் தெரிவித்து கொண்டிருந்தபோதே முத்துக்கணேஷ் என்பவரும் காரில் வட்டார போக்குவரத்து கழகத்திற்கு வந்திருந்தார்.

ஒரே சமயத்தில் இரு கார்களையும் பார்த்த அதிகாரிகள் குழப்பமடைந்தனர். மேலும் 2 கார்களின் நிறம், நம்பர், இன்ஜின் நம்பர், ஆவணங்களை ஆய்வு செய்தபோது ஒரே மாதிரியாக இருந்தன. மேலும் விசாரணையில், 2014-ம் ஆண்டில் இன்வோ காரை வாங்கியதாகவும், தற்போது புது கார் வாங்குவதற்காக இந்த காரை விற்பனை செய்ததாகவும் உமாதேவி தரப்பினர் தெரிவிக்கப்பட்டது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

அதேபோல், மதுரை தரகர் மூலம் தூத்துக்குடி தனியார் கார் விற்பனை நிலையத்தில் காரை 20 தினங்களுக்கு முன்பு வாங்கியதாக முத்துக்கணேஷ் தரப்பினர் தெரிவித்தனர். இதையடுத்து எது போலி, உண்மையானது என்பதை விசாரிக்க வட்டார போக்கவரத்து அதிகாரிகள் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார் கூறுகையில், ”புகார் வந்தபிறகு தான் எங்களுக்கே ஒரே நம்பர் பிளேட்டில் 2 கார்கள் இருப்பது தெரிய வருகிறது. ஆவணங்கள் சரியாக இருந்ததால் பெயர் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆவணத்தை அச்சு, அசலாக பிரதி எடுத்து கொடுத்துள்ளனர்.

இதனால் ஆவணம் போலி என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு ஆவணங்களிலும் காரின் முதல் உரிமையாளர் பெயர் உமாதேவி என்று தான் உள்ளது. ஆனால் புகைப்படம் மட்டும் போலி ஆவணத்தில் வேறொருவர் பெண் புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளோம். மோசடி கும்பல் விரைவில் பிடிபடுவர் ” என்று கூறினார்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

இதுகுறித்து கார் தரகர் ஒருவர் கூறுகையில், ‘ தமிழகம் முழுவதும் ஒரே நம்பர் பிளேட்டில் ஏராளமான போலி வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதனை ஒரு கும்பல் செய்து வருகிறது. அந்த கும்பல் கார் பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் வேறு ஏதாவதொரு வகையில் காரின் அசல் ஆவணங்களை பெற்று, அப்படியே நகல் எடுத்து விடுகின்றன. பிறகு அந்த ஆவணங்கள் அடிப்படையில் ஒரே நம்பர் பிளேட்டில் திருட்டு வாகனங்களை விற்பனை செய்து விடுகின்றன.

பலரும் தாங்கள் வாங்கிய பழைய காரை பெயர் மாற்றம் செய்வதில்லை. இதனால் உண்மை வெளிவருவதில்லை. நெல்லை, தூத்துக்குடி, சென்னை, கேரளா போன்ற இடங்களில் இதுபோன்று போலி ஆவணங்கள் மூலம் கார்களை விற்பனை செய்யும் கும்பல் செயல்பட்டு வருகிறது. இதனால் பழைய வாகனங்களை வாங்குவோர் உஷாராக இருக்க வேண்டும்,’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories