74 வயது அமைச்சர் 18 வயது பெண்ணோடு திருமணம்!

உலகம் சற்றுமுன்
marriage 1 - 2026

நைஜீரியாவில் 74 வயதான அமைச்சர் 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நைஜீரியா நாட்டில் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ளார் சபோ நனானோ. 74 வயது நிரம்பிய இவர் கடந்த 3ஆம் தேதி ரகியா என்ற 18 வயது இளம்பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த திருமணத்தில் வெறும் மூன்று நபர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தம்பதிகள் இருவருக்கும் இடையே 56 வயது வித்தியாசம் உள்ளதால் இந்த திருமணத்துக்கு அமைச்சர் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் ரகியா மீது உள்ள அதீத காதலால் அவரை யாரும் தடுத்து நிறுத்த முடியவில்லை என உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.