கொரோனா: தலைமை ஆசிரியை உயிரிழப்பு! கணவர் கவலைக்கிடம்!

சற்றுமுன் தமிழகம்
corono dead body
corono dead body

கொடுமுடியில் கொரோனா தொற்றுக்கு அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை பலியான நிலையில், கணவர் கவலைக்கிடமாக உள்ளார்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி, சாலைப்புதூர் அருகேயுள்ள ஈ.பி.ரோட்டை சேர்ந்தவர் நடேசன். இவரின் மனைவி உமா மகேஸ்வரி, 50; செம்மாண்டம் பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை.

சட்டசபை தேர்தலுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டார். கடந்த மாதம், 29ல், காய்ச்சல், சளியால் அவதிப்பட்ட நிலையில், ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.

பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. ஆபத்தான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை இறந்தார்.

கணவர் நடேசனுக்கும், தொற்று உறுதியானது. அவரும் கோவை தனியார் மருத்துவமனையில், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. இச்சம்பவம் கொடுமுடி பகுதியில், பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.