தற்கொலை இல்லை மாரடைப்பு.. உறவினர்கள் விளக்கம்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
kumararajan2 - 2026

நாமக்கல்லில் நடிகர் குமாரராஜன்(39) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் தூக்கிட்டு கொள்ளவில்லை, மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக அவர் உறவினர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

சந்தித்ததும் சிந்தித்ததும் என்ற படத்தை தயாரித்து நடித்தவர் குமாரராஜன். 2013ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை பாலு ஆனந்த் என்ற இயக்குநர் இயக்கினார்.

பாலு ஆனந்த், கஞ்சா கருப்பு, கொட்டாச்சி, கிங்காங் ஆகியோர் கூட்டணியில் சந்தித்ததும் சிந்தித்ததும் திரைப்படத்தில் காமெடியில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

சந்தித்ததும் சிந்தித்ததும் படத்தைத் தொடர்ந்து துப்பார்க்கு துப்பாய , ரெண்டுல ஒண்ணு ஆகிய படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமாகி இருந்தார் .

இந்நிலையில் அவரது தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டதாக செய்தி வெளியானது. இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர்.

லாரி பாடி பில்டிங் உரிமையாளர் குமாரராஜன், நாமக்கல் குமார் என்று நடிகர் ஆனார். அந்த பெயரிலும் பரவலாக அழைக்கப்பட்டு வந்தார். படப்பிடிப்பு இல்லாததால் தனது சொந்த ஊரான நாமக்கலில் தங்கியிருந்தார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

இந்த நிலையில் இவர் நாமக்கல்லில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது. திரையுலகினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குமாரராஜன் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அவர் மாரடைப்பால் தான் மரணம் அடைந்தார். உண்மை தெரியாமல் பேச வேண்டாம் என உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.