விலையேற்ற இறக்கம், வைரஸ், புயல், ஆட்சி தரும் கட்சி… கூறப்பட்ட இவ்வாண்டு பஞ்சாங்க பலன்!

சற்றுமுன் தமிழகம்
Rameswaram
Rameswaram

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உள் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த சூழலில் ராமேஸ்வரம் கோவிலில் வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் இந்த ஆண்டு சென்னையை புயல் கடுமையாக தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு நாளில் சோமாஸ்கந்தர் சந்நிதி முன்பு பஞ்சாங்கம் வாசிப்பது காலங்காலமாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இந்தாண்டு ராமேஸ்வரம் கோவிலில் சோமாஸ்கந்தர் சந்நிதி முன்பு சர்வசாதகம் சிவமணி பஞ்சாங்கத்தை வாசித்தார் அப்போது அதில் பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

அதில் இந்தியாவுக்கு வடகிழக்கிலுள்ள தென்கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து புதிய வகை வைரஸ் நோய் பரவும் என்றும் விளையாட்டு வீரர்களுக்கு இந்த ஆண்டு ஆபத்து நிறைந்த ஆண்டாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அத்துடன் தங்கம் வெள்ளி உள்ளிட்டவற்றின் விலை ஏற்ற இறக்கத்தை சந்திக்கும் என்றும் உலகில் பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  திருவனந்தபுரம் - சென்னை சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு! மேலும் ரயில்கள் நீட்டிப்பு விவரம்!

புதிய வைரஸ் நோய் தொற்று வேகமாக பரவி உலகத்தை ஆட்டிப்படைக்கும் நிலையில் மூலிகை மருந்து மட்டுமே அதற்கு தீர்வாக அமையும் என்றும் தேனீ, வண்டு, வவ்வால், வெட்டுக்கிளி போன்ற உயிரினங்களால் விவசாயத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பழமையான கட்சியே மீண்டும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் , வரலாறு காணாத மழை பெய்யும் , சென்னையை புயல் பலமாக தாக்கும் என்பதும் பஞ்சாங்க வாசிப்பில் தெரியவந்துள்ளது.

சென்னை இந்த ஆண்டு கடுமையான மழையால் தத்தளிக்கும், சென்னை, புதுச்சேரி, கடலூர், திருச்சி, மதுரை ,ராமநாதபுரம், இலங்கை இடங்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.