தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி.. கடத்தி அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை! 17 வயது சிறுவன் கைது!

Published:

vankodumai - 2026

ஓமலூர் அருகே 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைய செய்த 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கருக்கல்வாடி பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் கடந்த மாதம் வீட்டில் இருந்து தண்ணீர் பிடிக்க சென்றபோது திடீரென மாயமாகினார்.

பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், அவரது பெற்றோர் தாரமாங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கருக்கல்வாடியை சேர்ந்த 17 வயது சிறுவன், சிறுமியை கடத்திச்சென்று வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து, சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், தப்பியோடிய சிறுவனை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்த போலீசார், அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ராசிபுரம் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

Related articles

Recent articles

spot_img