நடிகைக்கு வந்தா இரத்தம் எங்களுக்குன்னா தக்காளி சட்னியா… பானுரேகா போட்ட வீடியோ!

சற்றுமுன் தமிழகம்
bhanu reha
bhanu reha

என் கணவனின் கள்ளக்காதல் பற்றி போலீசில் நான் புகார் தந்து ஒரு வருஷமாகுது. ஆனால், நடிகை ராதா புகார் தந்தால் மட்டும் உடனே நடவடிக்கை எடுக்கறீங்க? நடிகைக்கு வந்தால் ரத்தம். எனக்கு வந்தால் அது தக்காளி சட்னியா” என்று பாதிக்கப்பட்ட பானுரேகா என்ற பெண் வீடியோ போட்டு கமிஷனுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை வேப்பேரியை சேர்ந்தவர் பானுரேகா. இவர் சென்னை காசிமேடு காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணிபுரியும் பிரபாகரன் என்பவரை 1994-ல் திருமணம் செய்துள்ளார்.

ஆனால் பிரபாகரன் பல பெண்களுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு தனக்கு துரோகம் செய்ததாகவும், மேலும் தன்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதாகவும் கடந்த வருடம், பிப்ரவரி மாதம் போலீஸ் கமிஷனர் ஆபீசில் ஒரு அளித்திருந்தார்.

banu reha
banu reha

பிரபாகரன் பலமுறை வாய்ப்பு தந்தும், திருந்தவே இல்லை. வீட்டுக்கு மதுபோதையில்தான் வருவார். நகை, பணம் கேட்டு சித்ரவதை செய்வார். பிரபாகரனின் டார்ச்சர் தாங்க முடியாமல் புகார் தந்தேன்.. அவருக்கு சில பெண்களுடன் பழக்கம் இருப்பது தெரியவந்தது. அதனால் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த புகார் மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் அந்த புகாரின் படி இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பானுரேகா, திடீரென ஒரு வீடியோ வெளியிட்டார்.

அதில், ஆதங்கத்துடன் அவர் பேசி இருப்பதாவது: நான் கமிஷனர் முதல் இன்ஸ்பெக்டர் வரை புகார் அளித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. சென்னை நகர காவல்துறை பிரபாகரனுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது.

bhanu 2 1
bhanu 2 1

தன்னை 2வது திருமணம் செய்து அடித்து கொடுமைப் படுத்துவதாக எஸ்ஐ வசந்த ராஜா மீது சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் உடனடியாக காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஆனால் எனது புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

banu
banu

நடிகைக்கு வந்தால் ரத்தம். எனக்கு வந்தால் அது தக்காளி சட்னியா. நடிகைக்கு ஒரு நியாயம், எனக்கு நியாயமா? நடிகை என்றால் கரிசனம் காட்டும் காவல்துறை சாதாரண பெண்ணான எனது புகாரை ஏன் அலட்சியப்படுத்துகிறார்கள் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இவ்வாறு பானுரேகா தனது வீடியோ மூலம் கமிஷனருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.