ஆதார் கார்டு ஆபிசில் வேலை செய்யும் இளைஞர் ஒருவர் அங்கு வரும் பெண் கஸ்ட்டமர்களுக்கு ஆபாச செய்தி அனுப்பியதால் தாக்கப்பட்டார் .
மஹாராஷ்டிரா மாநிலம் தானேவின் மீரா-பயந்தர் பகுதியில் ஆதார் அலுவலகம் உள்ளது. அங்கு ஒரு இளைஞர் அலுவலக உதவியாளராக பணியாற்றினார்.
அப்போது அவரிடம் பல பெண்கள் ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்து அவர்களின் போன் நம்பர் மற்றும் அட்ரஸை கொடுத்தனர். அதை பெற்று கொண்ட அந்த இளைஞர், அந்த இளம் பெண்களின் போன் நம்பருக்கு இரவில் ஆபாச செய்திகளை அனுப்பினார். அதன் பிறகு அந்த ஆபாச செய்திகளை பார்த்த அந்த பெண்கள், அது யாருடைய நம்பர் என்று விசாரித்தனர்.
அப்போது அது ஆதார் அலுவலகத்தில் பணியாற்றும் அந்த இளைஞருடைய எண் என்று கண்டறிந்தனர் .
அதன் பிறகு அதில் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் ஒரு அரசியல் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். அதனால் அந்த கட்சியினர் அந்த இளைஞரை ஆதார் அலுவலத்திற்க்குள் புகுந்து அவர்களின் கட்சி ஆபீஸிற்கு தூக்கி சென்றனர்.
பின்னர் அந்த இளைஞரை அங்கு வைத்து அடித்து உதைத்தனர். இப்படி அவரை தாக்கும் காட்சிகள் கொண்ட வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் அந்த வாலிபரை பலர் சேர்ந்து தாக்கி அவரின் முகத்தில் கரியை பூசும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
அதனால் போலீசாரிடம் இந்த வீடியோ பற்றி பலர் கேட்டனர். இதற்கு பதிலளித்த பயந்தர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை, எனவே இதுவரை எந்த குற்றமும் பதிவு செய்யப்படவில்லை என்றார்.