வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்ட கிருஷ்ணர் சிலை!

சற்றுமுன் தமிழகம்
krishna
krishna

கீழ்பவானி வாய்க்காலில் கிடந்த வெள்ளி உலோகம் போன்ற கிருஷ்ணன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் எரங்காட்டூர் பகுதி வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்காலில், கிருஷ்ணர் சிலை ஒன்று கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர்க்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன் அச்சிலையை மீட்டு, சத்தியமங்கலம் வட்டாட்சியர் ரவி சங்கரிடம் ஒப்படைத்தார்.

சிலையை ஆய்வு செய்த வட்டாட்சியர், கிருஷ்ணர் சிலையின் அளவு மற்றும் வெள்ளி உலோகமா? என்பது குறித்து அருகே உள்ள நகை கடையில் கேட்டறிருந்து வருமாறு கிராம ஊராட்சி அலுவலரிடம் தெரிவித்தார்.

krshanar
krshanar

இதை அடுத்து, தனியார் நகைக்கடை ஒன்றில் சிலையின் அளவை பார்த்த போது, சுமார் 4.600 கிராம் எடை இருந்தது தெரியவந்தது. பின்னர் நகைக்கடை உரிமையாளரிடம் சிலை குறித்து கேட்டறிந்த போது, அச்சிலை வெள்ளியால் ஆனது அல்ல அலுமினியம், ஈயம் போன்ற உலோகங்களை கொண்டு உருவாக்கப்பட்டது என தெரிவித்தார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

கீழ்பவானி வாய்க்காலில் வெள்ளி உலோகம் போன்ற சிலை இருந்தது அப்பகுதி மக்களிடையே பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.