December 8, 2024, 2:12 PM
30.3 C
Chennai

தடுப்பூசி வாங்க சுகாதார துறைக்கு ரூ.2 லட்சம்! மன்சூர் அலிகானுக்கு கோர்ட் உத்தரவு!

Actor Mansoor Ali Khan
Actor Mansoor Ali Khan

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு.

நடிகர் விவேக் மரணத்தை அடுத்து பேசிய மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை குறித்து விமர்சித்திருந்தார்.

இதையடுத்து கொரோனா தொற்று நோயைப் பரப்பும் தீய எண்ணத்துடன் நடப்பது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மன்சூர் அலி கான் மீது வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கொரோனா தடுப்பூசி தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரி சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, அந்த தொகையை தடுப்பூசி வாங்க சுகாதாரத்துறைக்கு தரவும் ஆணையிட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பக்கூடாது என நிபந்தனை விதித்து, கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர் நிலையை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா!

இதனிடையே, ஏற்கனவே முன்ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...

பஞ்சாங்கம் டிச.08 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்: டிச.08ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம||श्री:|| !!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்!!ஸ்ரீ:!!श्री:श्रीमते...